கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி தான் தீர்வு என்பதை நமது அரசும், மருத்துவ நிபுணர்களும் தொடர்ந்து நமக்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


அந்த வகையில் இன்று பிரபல நடிகர் யோகி பாபு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்த புகைப்படத்தை யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவு செய்துள்ளார். இப்பதிவில் #GotVaccinated, #GetVaccinated என்ற tag-களை குறிப்பிட்டுள்ளார். யோகி பாபு வெளியிட்ட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள் .


இதற்கு முன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் போன்ற பல திரையுலக பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருவது, தடுப்பூசியை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.


மக்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்பதே இது போன்ற பதிவுகளின் வேண்டுகோள் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். திரையுலக பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு வெளியிட்ட புகைப்படங்களை கீழே உள்ள பக்கத்தில் காணுங்கள்.